
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் மல்லாட்டை, கல்லக்கா, வேர்க்கடலை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது நிலக்கடலை. இதில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது. விளைச்சலின் போது இதை அதிகம் தின்னும் எலிகள் பல்கி பெருகும்.
நிலக்கடலையில் மாங்கனீஷ் சத்து நிறைய உள்ளது. உடலுக்கு தேவையான கால்ஷியம் சத்தும் கிடைக்க உதவுகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தொடர்பான நோய்களை தடுக்கலாம்.
நிலக்கடலையில் உள்ள, 'ரெஸ்வரெட்ரால்' சத்து இதய நோய்களை தடுக்கிறது. பாலிபீனால்ஸ் இளமையை பராமரிக்க பயன்படுகிறது. நியாசின் சத்து மூளை வளர்ச்சிக்கு டானிக் போல் செயல்படுகிறது. மன அழுத்தம் போக்குகிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில் தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தியாகிறது.