
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
புளி, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய், வறுத்த வேர்க்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை, தண்ணீர் - சிறிதளவு
செய்முறை:
பச்சரிசியை சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி, முக்கால் பதத்தில் வேக வைக்கவும். அதில், புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும். வாணலியில் நல்லெண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வறுத்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து வறுத்து, சாதத்தில் போட்டு கிளறி நன்கு வேக வைக்கவும்.
சுவையுடன், ஆரோக்கியம் கலந்த, 'புளிப்பொங்கல்!' தயார். தயிர் பச்சடியில் தொட்டு சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்!
- கனகா சங்கர், சென்னை.
தொடர்புக்கு: 97911 44355