PUBLISHED ON : நவ 02, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளி கிழங்கு - 250 கிராம்
வெல்லம் - 1
கப்
தேங்காய் பால் - 2 கப்
ஏலக்காய் துாள், சுக்குத்துாள், நெய், முந்திரி,
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றி கிளறி கொதிக்க விடவும். பின், ஏலக்காய்துாள், சுக்குத்துாள், தேங்காய்பால் கலந்து, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை துாவவும்.
சத்துமிக்க, 'சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசம்' தயார். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்!
- எம்.வசந்தா, சென்னை.