
காட்டில் மூன்று ஆமைகள் நட்புடன் பழகின.
அவற்றில் ஒன்று குட்டி.
மூன்றுக்கும் காபி சாப்பிடும் ஆசை ஏற்பட்டது.
அவை நகரத்தில் ஒரு ஓட்டலுக்கு சென்றன.
காபிக்கு ஆர்டர் செய்து காத்திருந்தன.
சற்று நேரத்தில் மழை பெய்ய துவங்கியது.
குட்டி ஆமையிடம், 'வீட்டிற்கு ஓடி சென்று குடையை எடுத்து வா...' என்று கூறின பெரிய ஆமைகள்.
'நான் போகிறேன்... அந்தண்டை சென்றதும் நீங்க என் காபியை குடித்து விடக் கூடாது...'
நிபந்தனை போட்டது குட்டி ஆமை.
அதை பெரிய ஆமைகள் ஏற்றுக்கொண்டன.
இரண்டு மணி நேரம் கடந்தது -
குடை எடுக்க போனது திரும்பவில்லை.
'ஆறிப்போவதற்குள் குட்டி ஆமையின் காபியை நாமே குடித்துவிடலாம்...'
பெரிய ஆமைகள் கூறின.
'என் காபியை குடித்தால் குடை எடுத்து வர வீட்டுக்கு போக மாட்டேன்...'
அமர்ந்திருந்த மேஜையின் அடியில் குட்டி ஆமையின் மெல்லிய குரல் கேட்டது.
குழந்தைகளே... நம்பிக்கையுடன் வாழ பழக வேண்டும்!
ரா.அமிர்தவர்ஷினி

