தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தன்னம்பிக்கை தந்த வெற்றி!

தன்னம்பிக்கை தந்த வெற்றி!

தன்னம்பிக்கை தந்த வெற்றி!


PUBLISHED ON : ஏப் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாரூர், பாத்திமா மேல்நிலைப் பள்ளியில், 1985ல், 8ம் வகுப்பு படித்தேன். தமிழ் பாடம் மிகவும் பிடிக்கும் என்பதால், 100க்கு 90 மதிப்பெண் பெற்றேன். தமிழாசிரியை மேரி என்னை பாராட்டினார்.

ஒரு சமயம், பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி அறிவிக்கப்பட்டது. 'அதிக திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவியருக்கு பரிசு வழங்கப்படும். இதில் நீ கட்டாயம் கலந்து கொள்...' என்றார், தமிழாசிரியை.

நான் தயங்கினேன். 'உன்னால் முடியும். நிச்சயம் வெற்றி பெறுவாய்...' என, உற்சாகமூட்டினார்.

அவருக்காக சம்மதித்து, பெயரை பதிவு செய்தேன். போட்டி நாளன்று, படபடப்பாக இருந்தாலும், தமிழாசிரியை கொடுத்த தன்னம்பிக்கை, உற்சாகத்தால், 100 திருக்குறள்களை மடமடவென ஒப்புவித்தேன். அனைவரும் கைதட்டி பாராட்டினர்; பரிசும் கிடைத்தது. அது, எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. தொடர்ந்து, தமிழ் மன்றம் சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றேன்.

தற்போது என் வயது, 54. இல்லத்தரசியாக உள்ளேன். ஒரு மகன், மகள் உள்ளனர்; அவர்களை உயர்படிப்பு படிக்க வைத்தேன்; நல்ல வேலையில் உள்ளனர்.

பல்வேறு தமிழ் பத்திரிகைகளில், 30 ஆண்டுகளாக கதை, கட்டுரை, சமையல் குறிப்பு என, எழுதி வருகிறேன். ஏராளமான பரிசுகளையும் பெற்றுள்ளேன். இவற்றை எல்லாம், என் தமிழாசிரியை மேரிக்கு காணிக்கையாக்குகிறேன்.

பள்ளிக்காலத்தில் தமிழாசிரியை மேரி கொடுத்த தன்னம்பிக்கை தான், என் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற தெம்பும், தைரியமும் அளித்து வருகிறது.

- ஆர்.பிரபா, சென்னை. தொடர்புக்கு: 82487 17528

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us