
ஆப்பிள் மரத்தின் தாயகம் மத்திய ஆசிய நாடான கசகஸ்தான். காஸ்பியன் கடல் அருகே உள்ளது. இங்கிருந்து கி.மு., 1500ல், ஆப்பிள் விதை ஐரோப்பாவுக்கு பரவியதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. பின், கிரேக்கர், ரோமானியர், எட்ருஸ்கன் பயிரிட துவங்கினர். இதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கசகஸ்தான், தியான் ஷான் மலைத்தொடரில் உள்ளன. பழங்கால ஆப்பிள் மரக்காடுகளும் இருக்கின்றன.
கசகஸ்தான் தலைநகராக, 1997 வரை இருந்தது, 'அல்மா அத்தா' நகரம். இப்போது அல்மாத்தி என அழைக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு, ஆப்பிளின் தந்தை என பொருள்.
அல்மா என்பது ஆப்பிளை குறிக்கும் சொல். கிரிமிய தீபகற்பத்தில் பேசப்படும் தா ர்த்தாரிய மொழியிலானது. அத்தா என்றால் தமிழில் தந்தையை குறிக்கும். கசாக்கிய மொழியில் இந்த சொல் தந்தையை தான் குறிக்கிறது. ஆப்பிள் அதிகம் விளைந்ததால் தான், அல்மா அத்தா என்ற பெயர், இந்த நகரத்துக்கு சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
- ரூபன்