PUBLISHED ON : ஜூன் 13, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
தினை மாவு - 500 கிராம்
முருங்கை கீரை - 1 கட்டு
நெய், மிளகுத் துாள், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
தினை மாவு, உப்பு, மிளகுத் துாள் மற்றும் காம்பு நீக்கிய முருங்கை கீரையுடன், சிறிது நீர் விட்டு பிசையவும். அதை, உருண்டைகளாக்கி சப்பாத்தி போல் தேய்க்கவும். தோசைக்கல் சூடானதும், நெய் விட்டு சப்பாத்தியை வேக வைத்து எடுக்கவும்.
சூடான, 'தினை கீரை ரொட்டி' தயார். குருமா, சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- தே.சந்தியா, விருதுநகர்.
