PUBLISHED ON : ஜூன் 13, 2026

அ நிறம் | அளவு
என் வயது, 65; உணவகம் ஒன்றில் காசாளராக பணியாற்றி வருகிறேன். புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவன். தினமலர் நாளிதழ் மற்றும் இணைப்பு இதழ்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.
சிறுவர்மலர் இதழில் இடம்பெறும், 'மழலையர் பக்கம்' மனம் கவர்கிறது. பள்ளி நாட்களை காட்டும், 'ஸ்கூல் கேம்பஸ்' மலரும் நினைவுகளாக மகிழ்ச்சி தருகின்றன.
'சுட்டீஸின் முத்து கையெழுத்து' உற்சாகம் ஊட்டுகிறது. சிறுகதை படித்து, அதில் உள்ள நற்கருத்துகளை குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அனைத்து வயதினரிடமும், நல்லொழுக்கம், தேசப்பற்று, ஒற்றுமை எண்ணம் வளர்ந்தோங்க, சேவையாற்றி வருகிறது, சிறுவர்மலர் இதழ். அதன் பணி மென்மேலும் வளர்ந்தோங்க வாழ்த்துகிறேன்.
- எம்.சோமசுந்தரராமன், மதுரை.
தொடர்புக்கு: 90430 67797
