
சாப்பிடும் உணவு, நொறுக்குத் தீனியில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கார சுவைகள் கலந்து இருக்கும். துவர்ப்பு அதிகம் இருக்காது. விழாக்களில், விருந்திற்கு பின் வெற்றிலை, பாக்கு மெல்லும் பழக்கம் உள்ளது. பாக்கில் உள்ள துவர்ப்புச்சுவை, ஜீரண செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
வாழைப் பூவில் தயாரிக்கும் உணவும் துவர்ப்புச் சுவை தரும். இந்த பூவில் கால்ஷியம், பொட்டாஷியம், மக்னீஷியம், பாஸ்பரஸ், இரும்பு, -தாமிர சத்துகளோடு விட்டமின்களும் நிறைந்து உள்ளன. சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூல நோய் ஏற்படாமல் தடுக்கிறது. சிறுநீரகக் கோளாறுகளை தீர்க்கிறது.
செரிமானப் பிரச்னையால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகளை நீக்கும். வாழைப் பூவில் தயாராகும் உணவை உண்டு உடல் நலம் காப்போம்!
- ஆர்.முத்துசாமி