
என் வயது, 82; தபால்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழ் ரசிகனாகி, 30 ஆண்டு காலம் ஆகிறது. வேலைப்பளு காரணமாக, தினமலர் இணைப்பு இதழ்களை சில நாட்கள் படிக்காமல் விட்டதை, இழப்பாக கருதி வருந்துகிறேன்.
ஓய்வுக்குப் பின், இணைப்பு இதழ்களை தவறாமல் வாசித்து மகிழ்கிறேன். அதிலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர்மலர் இதழை, வரி தவறாமல் படித்து, என் பேரன், பேத்தியருக்கு அதன் சுவையை ஊட்டி மகிழ்கிறேன்.
அவர்களை, 'புதிர்!' போட்டிகளுக்கு எழுதி, பரிசு பெற ஊக்குவித்து வருகிறேன். இளமை குன்றாமல் தனிச்சுவையுடன் உள்ளது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. படக்கதை, அங்குராசு சொல்லும் செய்திகள், மொக்க ஜோக்ஸ், சிறுவர், சிறுமியரை ஊக்கப்படுத்தும், 'உங்கள் பக்கம்!' பகுதி ஓவியம் என, அனைத்தும் அருமை!
சிறுவர்களுக்கு அறிவில் தெளிவு ஏற்படுத்த வாரந்தவறாமல் மலரும், சிறுவர்மலர் இதழ் சிறக்க வாழ்த்துகிறேன்!
- ஆர்.சந்தானம், கடலுார்.
தொடர்புக்கு: 98650 12468