sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

புகழ் பெற்ற மலைகள்!

/

புகழ் பெற்ற மலைகள்!

புகழ் பெற்ற மலைகள்!

புகழ் பெற்ற மலைகள்!


PUBLISHED ON : டிச 30, 2023

Google News

PUBLISHED ON : டிச 30, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகின் பல பகுதிகளில் வியப்பூட்டும் வகையில் பல விதமாக மலைகள் அமைந்துள்ளன. வித்தியாசமான மலை பகுதிகள் குறித்து பார்ப்போம்...

தொட்டில் மலை: ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா பீடபூமியில் அமைந்துள்ள எரிமலை. இதன் உயரம், 5,069 அடி. குழந்தைகளுக்கான தொட்டில் போல இருப்பதால் இப்பெயர் வந்தது.

கிளிமஞ்சாரோ: கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவின் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும், உயரமான எரிமலை. ஆப்ரிக்கா கண்டத்தில் மிக உயர்ந்தது. கடல் மட்டத்திலிருந்து, 19 ஆயிரத்து, 341 அடி உயரம் உடையது.

சினாய் மலை: வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தின், சினாய் தீபகற்பத்தின் தெற்கு பகுதியில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 2,285 மீட்டர் உயரத்தில் உள்ளது.

டேபிள் மவுண்டன்: தென்னாப்பிரிக்காவில் உள்ள டேபிள் மவுண்டன் சிறப்பு பெற்றது. அதன் உச்சி, ஒரு மேஜை போல தட்டையாக அமைந்திருக்கும்.

மேட்டர்ஹார்ன்: ஐரோப்பிய நாடுகளான இத்தாலி - சுவிட்சர்லாந்து இடைப்பட்ட ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ளது. இதன் உயரம், 14 ஆயிரத்து, 692 அடி. இது பனிபடர்ந்த அழகிய மலை.

- வ.முருகன்






      Dinamalar
      Follow us