sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

குதிரை சவாரி!

/

குதிரை சவாரி!

குதிரை சவாரி!

குதிரை சவாரி!


PUBLISHED ON : ஜன 06, 2024

Google News

PUBLISHED ON : ஜன 06, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, சத்திரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1966ல், 8ம் வகுப்பு படித்தபோது விடுதியில் தங்கியிருந்தேன். அங்கிருந்து, பள்ளி வளாகம் அரை கி.மீ., துாரத்தில் இருந்தது. புஞ்சைக்காட்டில் குறுக்கு வழியாக செல்ல ஒற்றையடிப்பாதை இருந்தது. அங்கு நிலக்கடலை சாகுபடி செய்யும் போது, வழியை அடைத்து விடுவர். சுற்றியபடி தான் சென்று வர வேண்டும்.

போலியோ நோயால் கால்கள் செயல் இழந்த மாணவர் பரமசிவமும் அதே விடுதியில் தங்கியிருந்தார். தாங்கு கம்பு ஊன்றியபடி, தட்டு தடுமாறி சென்று வருவார். ஒரு மழை நாளில் மிகவும் சிரமப்பட்டவரை, முதுகில் ஏற்றி துாக்கி வந்து விடுதியில் சேர்ந்தேன்.

இது தொடர, 'குதிரை சவாரி போகுது...' என ஏளனம் செய்தனர் மாணவர்கள்.

வகுப்பாசிரியர் சண்முக நடராஜன் ஆங்கில பாடம் நடத்துவார். அதில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால், 'குதிரை சவாரிக்குத்தான் நீ லாயக்கு...' என்று திட்டியபடி அடிப்பார். இரண்டு பிரம்பாவது ஒடியும்; வலி தாங்காமல் துடிப்பேன்.

அன்று, பரமசிவத்தை துாக்கி சென்றபோது இடைமறித்த வகுப்பாசிரியர், 'என்ன... ரோட்டிலே விளையாட்டு காட்டுறியா... அவனை கீழே இறக்கு...' என கடிந்தார்.

தட்டு தடுமாறி இறங்கி நின்றது கண்டு திகைத்தபடி, 'சரி... பத்திரமா வாங்க...' என கூறி சென்றார். பயந்தபடியே வகுப்பில் நுழைந்தேன். பரிவுடன் வரவேற்று என் செயலை மாணவர்கள் முன் பாராட்டினார். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். பின், பிரத்யேகமாக வீட்டில் பயற்சி அளித்து, ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற உதவினார்.

நான் உதவிய பரமசிவத்தின் இப்போதைய நிலை பற்றி தெரியவில்லை. உள்ள உணர்வு, அவரை தேடி கொண்டிருக்கிறது.

என் வயது, 73; அரசு ஆரம்பப் பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். வாழ்க்கைக்கு வழி காட்டிய அந்த ஆசிரியரை நன்றி உணர்வுடன் மனதில் கொண்டுள்ளேன்.

- சி.சேது, மதுரை.

தொடர்புக்கு: 75984 75005







      Dinamalar
      Follow us