sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முகம் பார்த்து... முகம் பார்த்து...

முகம் பார்த்து... முகம் பார்த்து...

முகம் பார்த்து... முகம் பார்த்து...


PUBLISHED ON : ஜன 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2018ல், 10ம் வகுப்பு படித்தபோது வகுப்பாசிரியையாக இருந்த ஜெயா, மிகவும் அன்பானவர்; அறிவியல் பாடம் நடத்துவார்.

தாய் போல் பழகுவார். மாணவியருக்கு ஏற்படும் பிரச்னைகளை முகம் பார்த்தே அறிந்து கொள்வார். தனியாக அழைத்து கனிவாக தேற்றுவார்.

அவருக்கு இரு மகள்கள்; விடுதியில் தங்கி, கல்லுாரியில் படித்து வந்தனர். விடுமுறையில் வந்திருந்தவர்களிடம் எங்களை அழைத்து சென்று, 'பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...' என அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, புரியாத வினாக்கள் மற்றும் ஆங்கில இலக்கணத்தில் தெளிவு பெற்றோம். தயக்கத்தை தவிர்க்க, அவர்கள் வழங்கிய ஆலோசனை பெரிதும் உதவியது. அந்த வழிகாட்டுதலுடன் பொதுத்தேர்வில், 417 மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சி பெற்றேன்.

தற்போது என் வயது, 20; பொறியியல் கல்லுாரியில், கணினி அறிவியல் படிக்கிறேன். என் கல்வியில் அந்த ஆசிரியையும், அவரது மகள்களும் எடுத்த அக்கறை மிகப் பெரிது. அதை, அன்பு கலந்த மரியாதையுடனும் நினைவில் பதித்துள்ளேன். நன்றியுடன் நாளும் வணங்குகிறேன்.



- பரணி செல்வராஜ், திண்டுக்கல்.

தொடர்புக்கு: 93445 54319


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us