PUBLISHED ON : ஜன 27, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி - 1 கப்
உளுந்து - 0.25 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து, உப்பு சேர்க்கவும். மாவு புளித்த பின், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை கலக்கவும்.
பணியாரக் கல் சூடானதும், எண்ணெய் தடவி, மாவை ஊற்றி வேக வைக்கவும். சுவை மிக்க, 'குதிரைவாலி பணியாரம்' தயார். சத்துமிக்கது; அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- பா.ஜெயலட்சுமி, விருதுநகர்.
தொடர்புக்கு: 99524 12918