
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபூர்வமான தாவரம் நொச்சி. இதன் பூ, இலை, வேர், பட்டை என அனைத்தும் மருத்துவப் பலனளிக்கும். வீடுகளில், மிக சாதாரணமாக வளர்க்கலாம். ஆடு, மாடு போன்ற கால்நடைகள் இதை உண்பதை தவிர்க்கும்.
நொச்சி இலையை நீரில் கொதிக்க வைத்து, ஆவி பிடித்தால், மூக்கடைப்பு, ஜலதோஷம் தீரும். இதில் தயாரிக்கப்படும் தைலம், காசநோயால் ஏற்படும் புண்களை குணமாக்கும்.
உடலில் ஏற்படும் தேமல் நோய், நொச்சி இலை சாறை பூசி வர மறையும். மூட்டு வலி குணமாகும்.
- பெ.ம.அபிராமி