PUBLISHED ON : மார் 09, 2024

என் வயது, 49; சிறுவர்மலர் இதழை பல ஆண்டு காலமாக படிக்கிறேன். போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் பெற்றுள்ளேன். பெரியவர் மனதையும் உற்சாகப்படுத்துகிறது.
சனிக்கிழமை வந்தாலே, அக்கம், பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்னை சூழ்ந்து கொள்வர். சிறுவர்மலர் இதழை படிக்க போட்டி போடுவர். நேரம் ஒதுக்கி இதழைக் கொடுப்பேன். படித்ததும், கருத்து கேட்பேன். படிக்கும் ஆர்வம் மேம்பட்டு வருவதை காண முடிகிறது.
பள்ளி காலத்தை நினைவூட்டுகிறது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. வியத்தகு செய்திகளை வழங்குகிறார், அதிமேதாவி அங்குராசு! மூளைக்கு வேலை தரும் புதிர் போட்டி அருமை.
ஆரோக்கிய உணவை, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' தருகிறது. சிரிக்க, சிந்திக்க, 'மொக்க ஜோக்ஸ்!' தமாசுகள், குழந்தைகள் ஓவியத் திறனை, 'உங்கள் பக்கம்!' வெளிப்படுத்துகிறது.
வெற்றி பாதையில், 'இளஸ்... மனஸ்...' அழைத்து செல்கிறது. புன்னகை ததும்பும் குழந்தைகளால், 'குட்டி குட்டி மலர்கள்!' ஆழமாய் பதிந்துள்ளது. சிந்தனையை துாண்டி வரும் சிறுவர்மலர் இதழுக்கு பாராட்டுகள்!
- ஜெ.ரவிக்குமார், திருப்பூர்.
தொடர்புக்கு: 93606 25935

