PUBLISHED ON : மார் 09, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பசும் பால் - 500 மி.லி.,
பேரீச்சம் பழம் - 100 கிராம்
முந்திரி பருப்பு - 50 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
நெய், ஏலக்காய் பொடி, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பேரீச்சம் பழத்தை விதை நீக்கி பொடியாக நறுக்கவும். அதை, பசும்பாலில் கலந்து கொதிக்க விடவும். பின், சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
சுவை மிகுந்த, 'பேரீச்சம்பழம் பால் பாயசம்' தயார். இரும்பு, புரதம், நுண்ணுாட்ட சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.
- எஸ்.என்.பானுமதி, மதுரை.
தொடர்புக்கு: 98404 97297

