
* ஆப்பிள் பழத்தில், 25 சதவீதம் காற்று நிரம்பி இருக்கிறது. அதை தண்ணீரில் போட்டால் மிதக்கும்
* வெள்ளரி என்பது, காய்கறி கிடையாது; பழவகை. இதை எளிதாக கண்டுபிடிக்க, ஒரு வழி உண்டு. விதைகளை நடுவில் கொண்டிருக்கும் அனைத்துமே, பழ வகை தாவரங்கள்
* வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. அதனால் தான், குழந்தைகளுக்கு முதல் உணவில் சேர்கிறது; வாழையில் மகிழ்ச்சியைத் துாண்டும் ரசாயன பொருட்களும் உள்ளன
* ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பானில், தர்பூசணி பழத்தை சிறந்த பரிசுப் பொருளாக வழங்குகின்றனர்
* உலகின் சிறிய மர வகை, 'குள்ள வில்லோ' என்பதாகும். ஐரோப்பிய நாடான கிரீன்லாந்தில் காணப்படுகிறது. இந்த வகை மரங்களின் உயரமே, இரண்டு அங்குலம் தான். உலகின் உயரமான மரம், செக்கோயா. இது, 360 அடி உயரத்துக்கும் மேலாக வளரும்
* உலக அளவில், மிகுதியாக விளையும் காய்கறிகள் தக்காளியும், உருளைக்கிழங்கும். ஆனால், வெங்காயம் தான், உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக உள்ளது.
- வி.திருமுகில்

