
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுதுவதற்கு பெரிதும் உபயோகப்படுவது பென்சில். இது, 'பெனிசிலாஸ்' என்ற லத்தீன் மொழி சொல்லிலிருந்து பிறந்தது. அதற்கு, சிறிய வால் என பொருள்.
பென்சில் செய்ய பயன்படும் கிராபைட், 500 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இருந்தும், 1760ல் தான் பென்சில் உற்பத்தி செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த பேபர் குடும்பம், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டு தோல்வியடைந்தது.
ஜெர்மனியை சேர்ந்த என்.ஜே.கண்டே, 1795ல் கிராபைட்டுடன் களிமண்ணைச் சேர்த்தார். அந்த கலவையை சிறு குச்சிகளாக செய்து, காய வைத்தார். இப்படி பென்சிலை உருவாக்கினார். இதன் புறப்பகுதி பைன் மரத்தில் செய்யப்படுகிறது. இன்று, 500 வகையாக, பல உபயோகங்களுக்கு பென்சில் தயாராகிறது.
- எம்.நிர்மலா