
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடலுக்கு குளிர்ச்சி தருவது கிர்ணிப்பழம். உடல் அழகை பாதுகாக்கும். புரதமும், கொழுப்புச் சத்தும் அதிகம் உடையது. சருமத்துக்கு பொலிவு தரும். சருமம் வறண்டால், கிர்ணிப்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தடவலாம். நிவாரணம் கிடைக்கும்.
கிர்ணி விதை, தலைமுடிக்கு கன்டிஷனராக செயல்படும். முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டினால் கிர்ணிப்பழம் துண்டு மசித்து பூசி கழுவினால், பளிச்சென்று இருக்கும்.
வயோதிகத்தின் அறிகுறி கண்களில் தான் முதலில் தெரியும். இதை சரி செய்ய பால் பவுடர், கிர்ணி விதை பவுடர் சம அளவு தண்ணீரில் கலந்து, கண்களை சுற்றிலும் பூசி கழுவவும். முகச் சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி பிரகாசிக்கும்.