sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இளஸ் மனஸ்! (243)

/

இளஸ் மனஸ்! (243)

இளஸ் மனஸ்! (243)

இளஸ் மனஸ்! (243)


PUBLISHED ON : மார் 30, 2024

Google News

PUBLISHED ON : மார் 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா...

என் வயது, 16; பிளஸ் 1 படிக்கும் மாணவி. எனக்கு, 'கீச்' குரல் இருக்கிறது. அது மிகுந்த துன்பத்தை தருகிறது. தோழியர் என்னை, 'கீச்சி...' என பட்ட பெயர் வைத்து அழைக்கின்றனர். இதனால் மனம் வருந்துகிறேன். மாற்ற முயல்கிறேன்.

மனிதர்களுக்கு குரல் எவ்வாறு உருவாகிறது. குரல் வகைகள் என்னென்ன இருக்கிறது... உலகின் கவர்ச்சிகரமான குரலுக்குரியவர் யார் என்பதை அறிய விரும்புகிறேன். குரலை என் விருப்பத்துக்கு ஏற்ப மாற்ற முடியுமா... பதில் கூறுங்கள்!

இப்படிக்கு,

யு.அக்சரா செல்வி.


அன்பு செல்லம்...

ஒரு மனிதனுக்கு, குரலும், பேச்சும் எப்படி உருவாகிறது தெரியுமா... நுரையீரலிருந்து இரு வழி காற்று போக்குவரத்தால் உருவாகிறது. காற்று தொண்டை பெட்டியை தாண்டும் போது அதிர்வடைகிறது.

உதடுகள் ஒத்துழைப்புடன் பேச்சு உருவாகிறது. தொண்டை, மூக்கு, வாய் ஒன்று சேர்ந்து, ஒரு குரலை தனித்துவம் ஆக்குகின்றன. குரல் அர்த்த பூர்வமான பேச்சாக உருவாவது, மூளையில் உள்ள, 'ந்யூரான்' என்ற செல்களால் ஆகும்.

ஆண்கள் குரலை, டெஸ்டோஸ்டிரோனும், பெண்கள் குரலை, ஈஸ்ட்ரோஜென்னும் ஊக்குவிக்கின்றன. ஒரு குரலின் தன்மையை மரபணுக்கள், பாலினம், ஹார்மோன், எடை, உயரம், உதடு பிளவு போன்றவை தீர்மானிக்கின்றன.

பெண்களின் குரலை மூன்று வகையாக பிரிக்கலாம்.

அவை...

* சோப்ரனோ - சிறுவர், சிறுமியின் உச்ச பட்ச குரல்

* மிசோ, சோப்ரனோ - சோப்ரனோவில் பாதி குரல்

* கன்ட்ரோல்டோ - ஆண்மை ததும்பும் பலவீனமான குரல்.

ஆண்கள் குரலை நான்கு வகையாக பிரிக்கலாம்.

அவை...

* கவுன்ட்டர் டெனோர் - உச்சக்குரல்

* டெனோர் - நடுத்தரமான குரல்

* பேரிடோன் - அற்புதமான குரல்

* பேஸ் - அடித்தொண்டைக்குரல்.

ஒரு மனிதன் சாதாரணமாக பேசும் போது, ஒலியளவு, 60 டெசிபல். கின்னஸ் சாதனை புரிந்த ஜில் டிராக்கின் குரல், 129 டெசிபல். ராக்கெட் ஏவும் போது சப்தம், 204 டெசிபல். உலகில், 801 கோடி மக்களின் குரல்களும், ரேகைகள் போலவே தனித்துவமானவை.

கவர்ச்சிகரமான ஆண் குரல்களாக மதிக்கப்படுபவை...

மறைந்த அமெரிக்க பாடகர்கள் எல்விஸ் பிரஸ்லி, மைக்கேல் ஜாக்சன் மற்றும் பாடகர் ஜஸ்டின் டிம்பர் லேக், ரிக்கி மார்ட்டின், இந்தியில் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் உட்பட பலர் உள்ளனர்.

கவர்ச்சிகரமான பெண் குரலாக மதிக்கப்படுபவை...

அமெரிக்க பாடகிகள் பியோன்ஸ், மரியாகரே, நடிகைகள் ஜானட் ஜாக்சன், ஹிலாரி டப், இந்தி திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், தமிழில் பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா என பலரை சொல்லலாம்.

உன் குரலை மருத்துவ ரீதியாக மாற்றி அமைக்க முடியும்.

பேச்சு பயிற்சி, குரலை பெண்மைப்படுத்தும். அறுவை சிகிச்சை, லேசர் தொண்டை பெட்டி இசைவித்தல் அல்லது ஒட்டியாவிப்பு, சுருதி சமனப்படுத்தும் அறுவை சிகிச்சை போன்ற முறைகள் உள்ளன.

விரும்பிய குரலுடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்!



- அள்ளக்குறையா அன்புடன்,

பிளாரன்ஸ்!







      Dinamalar
      Follow us