
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு - 4
கடலை பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, சோம்பு - சிறிதளவு
எண்ணெய், உப்பு, தணணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பனங்கிழங்கை சுத்தம் செய்து வேக வைத்து துண்டுகளாக்கவும். கடலை பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். இரண்டையும் தனித்தனியே கொரகொரப்பாக அரைக்கவும். இவற்றுடன், உப்பு, சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், துண்டாக்கிய இஞ்சியை கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும், சிறு வடைகளாக தட்டி போட்டு வேக வைத்து எடுக்கவும். மொறு மொறுப்பான, 'பனங்கிழங்கு வடை' தயார். சத்துக்கள் நிறைந்தது. வித்தியாசமான சுவையில் இருக்கும். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- எம்.வசந்தா, சென்னை.