sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இளஸ் மனஸ்! (244)

/

இளஸ் மனஸ்! (244)

இளஸ் மனஸ்! (244)

இளஸ் மனஸ்! (244)


PUBLISHED ON : ஏப் 06, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 06, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு மிக்க பிளாரன்ஸ்...

எங்களுக்கு ஒரே மகன்; வயது, 14; அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறான். ஆறு மாதங்களாக அவன் செயலால் கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவனை விட, வயதில் குறைந்த சிறுவர், சிறுமியருக்கு தொந்தரவு தரும் வகையில் நடந்து கொள்கிறான்.

அவர்களை அழைத்து தலையில் குட்டுகிறான்; காதை பிடித்து திருகுகிறான்; ஐந்து விரல் தடயம் விழும் அளவுக்கு, முதுகில் அறைகிறான். மோசமான வார்த்தைகளால் அர்ச்சிக்கிறான்.

அவனை கண்டாலே தெரு குழந்தைகள் தெறித்து ஓடுகின்றனர். இது பற்றி அறிவுரைத்து, 'அடிக்காதே...' என்று கெஞ்சினால் முறைக்கிறான். தெருக்காரர்கள் புகார் மேல் புகார் செய்கின்றனர். மகனை திருத்த வழி சொல்லும்மா.

இப்படிக்கு,

ஜெகாதா நந்தீஸ்வரன்.

அன்பு சகோதரிக்கு...

உன் மகனின் துர்நடத்தை, தொடர் மன அழுத்தம், விரக்தி, மரபியல் பலவீனம், மனநிலை கோளாறு, ஹார்மோன் ஏற்ற இறக்கம், வீடு, பள்ளி, சமூகம் தரும் அழுத்தங்கள், பாலின ஈர்ப்பு, சக மாணவர்களால் புறக்கணிப்பு, பதற்றம், கற்றுக்கொள்வதில் சிரமம், புலன்களில் கோளாறு போன்றவை இது போன்ற நடத்தைக்கு காரணமாய் இருக்கலாம்.

சிறுவர்களிடம், ஐந்து வகையான வன்முறைகள் உள்ளன.

* உடல் ரீதியான வன்முறை - அடி, உதை, குத்து

* வாய் வார்த்தை வன்முறை - ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தல்

* உளவியல் வன்முறை - கேலி, கிண்டல், பட்டபெயர் சூடுதல்

* பாலியல் ரீதியான வன்முறை - எதிர்பாலினரை வம்புக்கு இழுத்தல்

* சமூக பொருளாதர வன்முறை - ஏழைகளை பரிகசித்தல்.

தெருக்குழந்தைகளுக்கு, தன்னை தலைவனாக, எஜமானாக, முதலாளியாக பெரிய அண்ணனாக காட்டிக் கொள்கிறான் உன் மகன்.

நீ செய்ய வேண்டியவற்றை பட்டியலிடுகிறேன்...

* வன்முறை மகனுக்கு என்ன பிரச்னை என்பதை, அவனிடமும், அவனை சுற்றியும் விசாரித்து தெரிந்துக் கொள். நீண்ட நேரம் பேசி, அவனது மன பாரத்தை இறக்கி வை

* சிறுவர், சிறுமியர் மீது கொடூரமான வன்முறை பிரயோகித்தால், பிரிவு 75ன்படி மூன்று ஆண்டிலிருந்து, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். அபராதமும் உண்டு என்பதை தெரியப்படுத்து

* சமத்துவ உரிமை ஷரத்து 14 குடிமக்கள் அனைவரும் சமம் என்கிறது. தனக்கு எல்லா விதத்திலும், சமமான சிறுவர், சிறுமியரை அடிக்க, உன் மகனுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை தெளிவுபடுத்து

* சிறுவர், சிறுமியரை தாக்கும் போது படாத இடத்தில் பட்டு ஏடா கூடம் ஆகி போனால், காலம் பூராவும் குற்றவாளி பட்டத்துடன் திரிவாய் என பயமுறுத்து

* ஒரு விடுமுறை நாளில், உன் மகனையும், தெருக்குழந்தைகளையும் ஒரே இடத்தில் அழைத்து, ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்

* உன் மகனுக்கு வன்முறையை போதிக்கும் நண்பர்கள் இருந்தால், சாதுர்யமாக அவர்களை கத்தரித்து விடு. மகனை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை வழங்கு.

வீடியோ கேம்ஸ் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் விளையாட அனுமதிக்காதே!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.






      Dinamalar
      Follow us