sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

கனிவுடன் கனியும் புத்தாண்டு!

/

கனிவுடன் கனியும் புத்தாண்டு!

கனிவுடன் கனியும் புத்தாண்டு!

கனிவுடன் கனியும் புத்தாண்டு!


PUBLISHED ON : ஏப் 13, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 13, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1ல் துவங்கும். தமிழ் புத்தாண்டு பெரும்பாலும் ஏப்ரல் 14ல் துவங்கி வசந்தத்தை வரவேற்கும். தமிழில் ஆண்டுகள், 60 என கணிக்கப் பட்டுள்ளது. அவற்றுக்கு தனித்தனி பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

முதலில், 'பிரபவ' என துவங்கி, 'அட்சய' என அடுத்த சுழற்ச்சிக்கு தயாராக நிறைவு பெறும். இப்போது பிறப்பது, 'குரோதி' வருடம். இது தமிழ் ஆண்டு வரிசை, 38ல் வருகிறது. குரோதி என்பதற்கு, பகைக்கேடு என பொருள்.

பிறக்கும் இந்த ஆண்டுக்குரிய அதிதேவதை அஜிரா பிரபு. அதிதேவதை என்பது ஏதாவது ஒரு தெய்வத்தின் குணத்தை ஒத்திருக்கும். ஒவ்வொருவர் பிறந்த நட்சத்திரத்துக்கும் தனி அதிதேவதை உண்டு. உதாரணமாக, உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு, அதிதேவதை விநாயகர் என்பதாகும். இவரே தெய்வங்களில் முதல்வர். நிதானமும், அதீத கோபமும் உடையவர்.

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நிதானமாகவே இருப்பர் என்பது நம்பிக்கை. ஆனால், நியாயத்துக்குப் புறம்பாக ஏதும் நடந்தால், பொறுத்திருக்க மாட்டர். இது போல, தமிழ் ஆண்டுகளுக்கும் அதிதேவதை உள்ளது.

குரோதி ஆண்டின் அதிதேவதை அஜிரா பிரபு, தலைமை ஏற்கும் பண்பை கொண்டிருப்பவர். இதை நட்சத்திரம் என்றும் கூறுவர். இந்த ஆண்டு துன்பங்களில் இருந்து மக்கள் மீள வேண்டுமானால், சரியான தலைமை இருக்க வேண்டும். தலைமை இருந்தால், நல்வாழ்வுக்கு திட்டங்கள் தீட்டப்படும். எனவே, அஜிரா பிரபு என்ற உயரத்தில் இருக்கும் நட்சத்திரம் தலைமை தேவதையாக பாவிக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு தினத்தை, சித்திரை விஷு என்றும் கூறுவர். தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளத்திலும் விஷு திருவிழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அகத்திய முனிவருக்கு, பார்வதியுடன், சிவன் திருமணக்காட்சி தந்ததாக ஐதீகம். இதை நினைவூட்டும் விழா, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் பக்தர்கள் முன்னிலையில் நள்ளிரவில் நடக்கும்.

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில், சித்திரை முதல்நாளில் கனி காணும் நிகழ்ச்சி கோவில்களிலும், வீடுகளிலும் நடைபெறும். மாம்பழம், ஆப்பிள், வெள்ளரி, வாழை உள்ளிட்ட பழங்களை ஒரு தட்டில் அலங்கரித்து வைப்பர். தங்க நகைகளும், மஞ்சள் நிற பூக்களும் தட்டில் அழகுற வைக்கப்படும். அந்த தட்டின் முன் ஒரு நிலைக் கண்ணாடி வைக்கப்படும். தமிழ் புத்தாண்டு அன்று காலை, அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் பழங்கள் மற்றும் நகையின் பிம்பங்களை பார்த்து மகிழ்வர்.

குடும்பத்தில் மூத்த உறுப்பினர், சிறியவர்கள் கண்களைப் பொத்தி அழைத்து வந்து கண்ணாடி முன் நிறுத்துவர். இந்த செயல், ஆண்டு முழுதும் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதை குறிப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

கேரள கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதத்துடன், கையில் காசும் கொடுப்பர். இந்த நிகழ்வு, 'கைநீட்டம்' என அழைக்கப்படுகிறது. கனி காணும் நிகழ்ச்சி மகிழ்ச்சி தரும். வாழ்வை இனிக்க வைக்கும்.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

- தி.செல்லப்பா






      Dinamalar
      Follow us