
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஞ்சி அபூர்வ மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதை அரைத்து நீரில் கலந்து தெளிய வைக்கவும். அந்த நீருடன், துளசி இலை சாறை சேர்த்து ஒரு வாரம் சாப்பிட வாயு தொல்லை நீங்கும். குமட்டல், வாந்தியை தடுக்கும். காலையில் ஏற்படும் சோர்வை போக்கும்.
இஞ்சியை அரைத்து, நீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து பருகலாம். செரிமான பிரச்னைகள் அகலும். இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால் பல்வலி நீங்கும். சிறிது இஞ்சியை அரைத்து நீரில் கொதிக்க வைத்து இறக்கி எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம். நெஞ்சு பகுதியில் சளி நீங்கி நிவாரணம் கிடைக்கும்.
--- மு.நாகூர்