sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொறுப்பு ஏற்பு!

பொறுப்பு ஏற்பு!

பொறுப்பு ஏற்பு!


PUBLISHED ON : ஏப் 20, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 20, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலுார் மாவட்டம், காட்பாடி ஜில்லா போர்டு நடுநிலைப் பள்ளியில், 1945ல், 3ம் வகுப்பு படித்த போது, இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்தது.

வகுப்பில், 40 மாணவர்கள் இருந்தோம். ஆசிரியர் முனாப், திறந்தவெளி வளாக மர நிழலில் அமர வைத்து பாடம் நடத்துவார். முதலில், தமிழ் மொழியில், உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் மற்றும் கணக்கு வாய்ப்பாடுகளை மனதில் பதிக்க வழி வகை செய்தார்.

வகுப்பு துவங்கி, மூன்று வாரங்கள் வரை, இவற்றை நடத்தியதால், 'கசடற' தேர்ந்து சிறந்து விளங்கினோம். என் வீட்டருகே எழுத படிக்க தெரியாத ஏழைகள் வசித்தனர். அவர்களுக்கு கடிதம் எழுதுவதில் உதவ ஆரம்பித்தேன். தொடர்ந்து, தமிழ் கட்டுரை போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றேன்.

பள்ளி அருகே, 10 ஏக்கர் காலியிடம் இருந்தது. அதன் ஒரு பகுதியில், தற்காலிக ராணுவ மையம் அமைந்திருந்தது. அங்குள்ள கிடங்கில், பெட்ரோல், டீசல் மற்றும் வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதியில் தான் நாங்கள் விளையாடுவோம்.

ஒருநாள், பிற்பகல், வகுப்பு இடைவேளை நேரத்தில், ராணுவ மையத்தில் பெரிதாக வெடி சத்தம் கேட்டது. பெரிய டிரம்கள் நெருப்புடன் மேலெழுந்து வெடித்து சிதறின. பள்ளி சுற்றுசுவர் அருகில் நின்று வேடிக்கைப் பார்த்தோம்.

விரைந்து வந்த அந்த ஆசிரியர், மெயின் கேட் அருகில் நின்று பாதுகாப்பு கொடுத்தார். மாற்று வழியில் எங்களை வீட்டுக்கு அனுப்புவதில் முனைப்புக் காட்டி சிறப்புற நிறைவேற்றினார். என் வயது, 87; மின்வாரியத்தில் பொறியாளராக பணி செய்து ஓய்வு பெற்றேன். பள்ளியில் படிப்பு சொல்லி தந்ததுடன், பாதுகாப்பிலும் அக்கறையுடன் செயல் பட்ட அந்த ஆசிரியரை போற்றுகிறேன்.

- டி.சம்பத், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us