sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வாழ்க்கை கணக்கு!

வாழ்க்கை கணக்கு!

வாழ்க்கை கணக்கு!


PUBLISHED ON : ஏப் 20, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 20, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் நுாற்றாண்டு விழா கண்ட பெரம்பூர் ஆர்.பி.சி.சி.சி., உயர்நிலைப் பள்ளியில், 1958ல், 4ம் வகுப்பு படித்தேன். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த மூன்றே நாளில், வகுப்பாசிரியர் ராமைய்யா, மாரடைப்பால் காலமானார். அதிர்ச்சியுடன் செய்வதறியாது திகைத்தோம். இரண்டு மாதங்களுக்கு பின், வகுப்பாசிரியராக துடிப்பு மிக்க ஆர்.ஜனார்த்தனம் வந்தார்.

கணக்கு, ஆங்கில பாடங்களை அவர் கற்பித்த விதம், மிக நேர்த்தியாக இருந்தது. வகுப்பை கவனித்தாலே அனைத்தும் புரிந்து விடும். தேவையான போது கண்டிப்பாகவும் நடந்து கொண்டார்.

புரிந்து படித்ததால் அதிக மதிப்பெண் பெற்று எல்லா தேர்வுகளிலும் முதல், இரண்டாம் இடங்களை மாறி மாறி பிடித்து வந்தேன். தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றேன்.

பள்ளி படிப்பை முடித்து விடை பெற்ற போது அந்த ஆசிரியரிடம், 'ஆட்டோகிராப்' கேட்டேன். என் நோட்டில், 'லைப் + ஜாய் = ஹெவன்; லைப் - ஜாய் = ஹெல்; அப்படியானால், லைப் = ?' என எழுதி, கணக்கை, 'சால்வ்' செய்ய கூறினார்.

தீவிர சிந்தனைக்கு பின், 'லைப் = ஹெவன் + ஹெல்' என, எழுதிக் காட்டினேன். நெகிழ்ச்சியுடன், 'பாதிக்கு பாதி கஷ்டமும், சுகமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. இதை புரிந்து கொள்...' என்று அறிவுரைத்து வாழ்த்தினார். அது நிறைவு தந்தது.

என் வயது, 78; ரயில்வே துறையில், உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியர் நினைவாக, நான் வசிக்கும் பகுதியில் சிறு சேவைகளில் ஈடுபட்டு சுறுசுறுப்புடன் வாழ்கிறேன்.

- வெ.முரளிதரன், சென்னை.

தொடர்புக்கு: 80731 23858


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us