
என் வயது, 70; குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை விரும்பி வாசிக்கிறேன். இதில் வெளி வரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள், பள்ளி பருவத்து நினைவுகளை தருகிறது. அந்தக்காலம் மீண்டும் வராது என்றாலும், இந்த கடிதங்கள், சுகமான தேடலை மனதில் அனுபவிக்க வைக்கின்றன.
அறிவுரை கூறும் தந்தை போல் சிறுகதைகள், அறுசுவை உணவு தரும் அன்னை போல், மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன், கற்றுத்தரும் ஆசான் போல் பிளாரன்ஸ் ஆன்டி, இளம் தளிர்களை ஊக்குவிக்கும், உங்கள் பக்கம், சிரிக்க சிந்திக்க வைக்கும் மொக்க ஜோக்ஸ், அதிமேதாவி அங்குராசுவின் பயனுள்ள தகவல்கள் என படிக்க படிக்க இனிமை தருகிறது.
தனிமையை களைந்து புதிய உற்சாகம் தருகிறது சிறுவர்மலர் இதழ். பயணக் களைப்பில் இருப்போருக்கும் அரிய விருந்து படைக்கிறது. இன்னும் புதிய கருத்துகளுடன், சிறுவர்மலர் சிறப்புடன் திகழ வாழ்த்துகிறேன்.
- ச.திரவியம், தேனி.