
என் வயது, 55; அச்சக பணியாளராக உள்ளேன். சிறுவர்மலர் இதழ் வாசிக்கும் பழக்கம், பக்கத்து வீட்டில் வசிக்கும், 15 வயது சிறுவனால் ஏற்பட்டது. அதுவே, வழக்கமாக மாறி விட்டது. படிப்பது மட்டும் அல்ல படைப்புகளை எழுதவும் ஆரம்பித்து விட்டேன்.
வாரத்தில் சனிக்கிழமை வரும் வரை ஒவ்வொரு நாளும் யுகமாக மறையும். அன்று சிறுவர்மலர் இதழை படித்தால் தான், மனதுக்கு உற்சாகம் வரும். அறிவு சார்ந்துள்ளது படக்கதை. இளமைப் பருவத்தை, 'ஸ்கூல் கேம்பஸ்!' நினைவூட்டுகிறது. நல்ல பாடமாக அமைகிறது.
மொக்க ஜோக்ஸ் படித்ததும் அதுபோல் எழுத துாண்டுகிறது. மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன் உடல் ஆரோக்கியம் பேணுகிறது. சிறுவர், சிறுமியர் கைவண்ண ஓவியங்கள் கண்ணாடி பிம்பமாய் பிரதிபலிக்கின்றன. சிறுகதைகள் படிப்பினை ஊட்டுகின்றன.
அரிய செய்திகளை, அதிமேதாவி அங்குராசு அள்ளி தருகிறார். சிறுவர்களுக்கு மட்டுமல்ல; பெரியோருக்கும் 'இளஸ்... மனஸ்...' பகுதி சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறது. சிறுவர்மலர் புதையல் மட்டும் அல்ல; பொக்கிஷம். இனி பிறக்கும் குழந்தைகளும், இதை வாசிக்க வேண்டும் என முழுமனதுடன் பிராத்திக்கிறேன்.
- எம்.எம்.முத்தையா, திருப்பூர்.
தொடர்புக்கு: 80984 64091