
உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஊட்டச்சத்தை தருவது உணவு. இது, தாவரம் மற்றும் விலங்குகளில் இருந்து கிடைக்கிறது. உணவில், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், உயிர்ச்சத்து, தாதுக்கள் நிறைந்துள்ளன. உயிர்வாழ தேவையான ஆற்றலை வழங்குகிறது. உலகின் மிக விலையுர்ந்த உணவு பொருட்கள் குறித்து பார்ப்போம்!
வொயிட் ட்ரபில்ஸ்: ஐரோப்பிய நாடான இத்தாலியில் குறிப்பிட்ட பகுதிகளில் கிடைக்கும் அரிய உணவு பொருள். இதன் விலை மிக மிக அதிகம்.
சிவெட் காபி: தனித்துவமான உற்பத்தி முறை கராணமாக, உலகின் விலையுர்ந்த காபியாக கருதப்படுகிறது. ஒரு கப் காபி, 8,000 ரூபாய் வரை உள்ளது.
குங்குமப்பூ: சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் மிக விலையுயர்ந்த மசாலாப் பொருட்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடும் உழைப்பால் அறுவடை செய்ய வேண்டியுள்ளதால் பெரும் மதிப்பை பெற்றுள்ளது. இதன் விலை, ஒரு கிராம் 2,000 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.
யுபரி கிங் முலாம்பழம்: சீரான இனிப்பு மற்றும் அழகிய தோற்றத்தால் புகழ் பெற்றது. கிழக்காசிய நாடான ஜப்பானில் அதிகம் விளைகிறது. மிகவும் விலையுயர்ந்த பழங்களில் முதலிடத்தில் உள்ளது. இது ஏலமுறையில், 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மாட்சுடேக் காளான்: கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் உணவுகளில் முக்கியமானது. உலக அளவில் மிகவும் விலை உயர்ந்த நறுமணக் காளான்களில் ஒன்று. இது, 500 கிராம், 88 ஆயிரம் ரூபாய்க்கு சந்தையில் விற்கப்படுகிறது.
- வி.கவுதம சித்தார்த்