PUBLISHED ON : ஜூன் 15, 2024

என் வயது, 30; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். அனைத்து வயதினருக்கும் அறிவூட்டும் அரிய பெட்டகமாக விளங்குகிறது. சிறு வயதில் செய்த குறும்பான செயல்களை எடுத்துக் கூறும், 'ஸ்கூல் கேம்பஸ்!' மேன்மையானது. நீதிகதை, சிறுகதை, மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன், மொக்க ஜோக்ஸ் என, அனைத்து பகுதிகளும் சிறப்பாக உள்ளன!
இதமான அறிவுரை தரும், 'இளஸ் மனஸ்' தொடர் பாராட்டத்தக்கது. சிறுவர், சிறுமியர் வரையும் வண்ண ஓவியங்கள் ரசனை மிக்கவை. மழலையர் பிஞ்சு முகங்கள், குட்டி குட்டி மலர்களாக உள்ளம் கொள்ளை கொள்கின்றன. அறிவியல், ஆராய்ச்சியில் கிடைக்கும் அரிய தகவல்கள், 'அதிமேதாவி அங்குராசு!' பகுதியை அலங்கரிக்கின்றன. அவை வியப்பை தருகிறது.
பெரியவர்களையும் வாசகராக உடைய இதழ் சிறுவர்மலர் மட்டும் தான். இது, வளர்பிறையாக மலர்ந்து நறுமணம் வீசி, விண்ணை தொட வாழ்த்துகிறேன்.
- டி.மனோன்மணி, மதுரை.