PUBLISHED ON : ஜூன் 22, 2024

என் வயது, 47; கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை, நீண்ட காலமாக படித்து வருகிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை, 5:00 மணிக்கே எழுந்து விடுவேன். முதல் நபராக சென்று, தினமலர் இதழை வாங்கி வந்து முதலில் சிறுவர்மலர் படித்து விடுவேன். ஒரு வரி கூட விடுவதில்லை. குடும்பத்தில் அனைவரும் போட்டி போட்டு படித்து மகிழ்கிறோம்!
சிறுகதைகள், சிறுவர் சிறுமியரை சிந்திக்க வைக்கின்றன. கடந்த காலத்தை நினைவூட்டும், ஸ்கூல் கேம்பஸ் கட்டுரைகள் தனி சுகம் தருகின்றன. சிரிக்க, சிந்திக்க வைக்கிறது மொக்க ஜோக்ஸ் தமாசுகள். ஆச்சரிய மூட்டுகின்றன சிறுவர், சிறுமியரின் கைவண்ண ஓவியங்கள்! சிறுவர்மலர் இதழை படிக்கும் போது, மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படுகிறது.
அனைத்து வயதினரும் படிக்க உகந்த சிறுவர்மலர், என்றும் ஜொலிக்க வாழ்த்துகிறேன்!
- எம்.கல்லுாரிராமன், ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 94423 62244