PUBLISHED ON : மே 13, 2011

ரொம்ப சூடுங்கோ!
மெடிடெரேனிய பகுதியின் பல இடங்கள் உலகில் வேறு எங்கும் காண முடியாத தாவரங்களை கொண்டுள்ளன. புவியியல் நிலையின்மை, இவற்றின் சிறிய இட அமைப்பு ஆகியவற்றால் இவை சூடான பகுதிகளாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
இவை உயிரின வாழ்தலை பற்றி ஆராயும் அமைப்பினரால் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக குறிக்கப்பட்டு உள்ளன. உலகின் முக்கியமான சூடான பகுதிகளில் ஒன்று மெடிடெரேனிய கடல் பகுதியை ஒட்டிய நிலப்பகுதியாகும். இங்கே வேறு எங்கும் காண முடியாத 13 ஆயிரம் தாவர வகைகள் காணப்படுகிறது. வெப்ப மண்டல ஆண்டஸ் பகுதியில் 20 ஆயிரம் தாவர வகைகள் காணப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் மெடிடெரேனிய பகுதி உள்ளது.
இயற்கை பொக்கிஷங்கள். தென் ஆப்பிரிக்க கடலினை ஒட்டிய மெடிடெரேனிய பகுதியில்தான் இதுபோன்ற அரிய வகை தாவரங்கள் காணப்படுகிறது.
மாகுவிஸ் மற்றும் காரி கியூ!
மெடிடெரேனிய ஐரோப்பிய பகுதி இரு சற்றே வித்தியாசமான தாவரங்களால் சூழப்பட்டுள்ளன. மாகுவிஸ் என்பது வறண்ட புதர் செடி வகையை சேர்ந்தது. ரொம்ப குறைவாய் காணப்படும் காரிகியூ - புதர்செடி போலவோ புல் நிலம் போலவோ தோற்றம் அளிக்கும். இங்கே மரங்களோ, வேறு உயரமான தாவரங்களோ காணப்படாது.
அதற்கு காரணம் நூற்றாண்டுகளுக்கு முன்பு விறகு தேவைக்கு மரங்கள் வெட்டப்பட்டு விட்டதுதான். இந்த புதர் செடி மண் அரிப்பை, விலங்குகளின் மேய்ச்சல் பாதிப்பை தடுத்தது. ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள பெரும்பாலான பகுதிகளில் மாகுவிஸ் வகை தாவரங்கள் காணப்படுகிறது.
ஸ்பானிய மாகுவிஸ். இந்த தாவரம் மரங்கள் நிறைந்த நிலம், புற்கள் அடர்ந்த நிலம் மற்றும் பாதி வறண்ட தாவரங்கள் நிறைந்த நிலம் ஆகிய அனைத்து நில பண்புகளையும் இவை கொண்டுள்ளன.
தீ காயம் ஏற்பட்டால்...
எதிர்பாராத விதமாக நம் உடலில், 'தீ' காயம் பட்டுவிட்டால் உஷ்ணத்தை விரைவில் அப்புறப்படுத்துவதே முதல் உதவி. அதாவது தீப்பட்ட பாகத்தை தண்ணீரில் வைத்து குளிரச் செய்ய வேண்டும். தண்ணீர் ஊற்றினால் கொப்புளம் ஏற்படுமே என்று நினைக்கலாம். ஆனால், மருத்துவ ரீதியாக கொப்புளம் ஏற்பட்டால் நல்லது. கொப்புளம் என்பது மேலாக ஏற்படும் புண். ஆனால், கம்பளி அல்லது ஜமுக்காளத்தால் போர்த்தி தீயை அணைக்க வேண்டாம். கம்பளி எரியும் பொருளை அணைக்குமே தவிர, உள்ளேயுள்ள வெப்பத்தை வெளியேற்றாதபடி தடுத்துவிடும்.
மேலும், தீ விபத்துக்குள்ளானவர்கள் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டால், தன்னம் பிக்கையே முதல் மருந்து. உடலில் தீப்புண் எவ்வளவுக்கெவ்வளவு பரவலாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு விபத்தின் கொடூரம் அதிகம். ரத்த நாளங்களும், தசைநார்களும் சிதைவுப்பட்டு நீர்போன்ற திரவம் உடலிலிருந்து வெளியே வருகிறது. அதனால், ரத்தத்தில் திரவ தன்மை குறைந்து சுண்டிப்போய் கெட்டியாகிறது. இந்த கெட்டியான ரத்தத்தை உடலில் கொண்டு செல்ல இதயம் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. உடனே மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உடலில் ஏதாவது திடீர் விபத்து ஏற்பட்டால், அந்த சூழ்நிலையை சமாளிக்க பாதிக்கப்பட்ட பகுதியில், ரத்தம் பரவும். தோல் சதைப்பாகங்கள் ஜீரண குழாய் முதலியவற்றில் ரத்த ஓட்டம் குறையும். ஜீரண சக்தி இருக்காது. எனவே, லேசான நீர் ஆகாரங்கள் மட்டுமே கொடுக்க வேண்டும்.
எப்போதும் தீயை வெறுங்கையால் அணைக்க முயலாதீர்கள். நீங்களே விபத்துக் குள்ளாவீர்கள். மின் கசிவினாலோ, பெட்ரோல், மண்ணெண்ணெய் முதலிய எண்ணைப் பொருட்களால் தீ விபத்து ஏற்பட்டால், தண்ணீர் ஊற்ற கூடாது. எரியும் பெட்ரோலை, நீர் பரவச் செய்யும். மின்சாரத்தினால் தீ விபத்து என்றால் மின் தாக்குதலுக்கு உள்ளாவார்கள்.
கோதுமையின் முன்னோர்கள்!
மெடிடெரேனிய பகுதியின் காட்டுப்புல் வகைகளில் கோதுமை மற்றும் பார்லியின் முன்னோரும் உண்டு. இவை இரண்டும் மனிதனால் பயிரிடப்பட்ட முதன்மை தாவரங்களை சேர்ந்தவைகளாகும். சமையல் சார்ந்த, மருத்துவம் சார்ந்த மணமூட்டக்கூடியவை சார்ந்த தாவரங்கள், இங்கே நீர்ப்படுகைகளில், புதர்களில் தோட்டச் செடிகளில் காணப்படுகிறது.
