தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சும்மா! சம்மர் டைம் பாஸ்! நான் யார்?

சும்மா! சம்மர் டைம் பாஸ்! நான் யார்?

சும்மா! சம்மர் டைம் பாஸ்! நான் யார்?


PUBLISHED ON : மே 13, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1.நான் மூக்குல உட்கார்ந்திருப்பேன். அப்படி உட்காருவதற்கு இரண்டு காதுகளையும் கெட்டியாக பிடித்து இருப்பேன். ஏடாகூடமா இப்படி இருக்கிற நான் யார்?

2. நான் ஒரு 'டேபிள்'; ஆனால், எனக்கு கால்கள் இல்லை; நான் டைம்-டேபிள் அல்ல; ரொம்பவும் உபயோகமான நான் யார்?

3. நான் உருண்டை மனிதன். நான் பிறக்கும் போதே எனக்கு ஒரு கை நீளமாகவும், ஒரு கை குட்டையாகவும் இருந்தது. இப்படி பிறந்ததால நான் ஓரமா ஒதுங்கி அழலை. கடுமையாக உழைச்சேன். இப்ப உலகமே என்னை பார்க்காம எதையும் செய்யறதில்லை. நான் யாருக்காவும் காத்திருப்பதில்லை. அவ்வளவு முக்கியமான நான் யார்?

4. பேப்பர், மரம், பெட்ரோல், இதெல்லாம் நான் விரும்பி சாப்பிடுவேன். தண்ணீர் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. எனக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. எவ்வளவு தலைக்குபுற கவிழ்த்தாலும் மேல் நோக்கிதான் இருப்பேன். இந்த 'மேலான' நான் யார்?

5. ஒரு மனிதன் மூன்று மாதத்திற்கு ஒருமுறை முடி வெட்டி கொள்வான். தினம் ஒருமுறை 'ஷேவ்' செய்து கொள்வான். நான் மட்டும் தனி ரகம். தினமும் 10 தடவைக்கும் மேலாக 'ஷேவ்' செய்வேன். இதற்காக யாரும் என்னை கிண்டல் செய்வதில்லை. பாராட்டி காசு கொடுத்துட்டு, போவாங்க. அடடே, இவன் யாருன்று ஆச்சரியமா இருக்கா! ஆமாம் நான் யார்?

6.உங்களிடம் உங்களை கொடுக்கணும்னா முதலில் உங்களிடமிருந்து அதை எடுக்கணும். அந்த 'அதை' என்பது என்ன?

7. நான் யார் என்பதற்கு பல 'க்ளூ'க்களை கொடுக்கிறேன். பத்தில் ஐ-யை எடுத்துவிட்டால் நான் வருவேன். தலை இல்லாத ஆறு நான். எட்டில் பாதி நான். இப்படிப்பட்ட என்னை எடை போட்டால் என் எடை என்ன இருக்கும். ஆமாம் நான் யார்?

8. நான் தலைவலியை சேர்ப்பேன். நிம்மதியை கழிப்பேன். அப்படிப்பட்ட கொடைச்சல் பார்ட்டியாகிய நான் யார்? 'படிக்கிற' பசங்களான உங்களுக்கு நிச்சயம் தெரியாமல் இருக்காது?

9. 18-ஆம் நூற்றாண்டு. அப்ப இருந்த விஞ்ஞானிகள், பணக்காரர்கள், சாதனையாளர்கள், அரசர்கள், சாதாரண மனிதர்கள் ஏன் விலங்குள் இவர்கள் எல்லாருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை உண்டு... அந்த ஒரே ஒரு ஒற்றுமை என்ன?

10. ராஜா, ராணிக்கெல்லாம் முடி சூட்டுவார்கள். படத்தில் கூட பார்த்து இருப்பீர்கள். அப்புறம் பெரும்பாலான நாடுகளில், ராஜா,ராணி முறை எல்லாம் போய்விட்டது. இப்ப உலகில் வெகு சில நாடுகளில் மட்டுமே, 'ராஜா-ராணி' இருக்காங்க. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க நாடு, இங்கிலாந்து. அந்த நாட்டில் ராஜா, ராணிகளுக்கு முடி சூட்டுவது எங்கே என்பது உங்களுக்கு தெரியுமா?

விடைகள்:

1.மூக்கு கண்ணாடி

2.வெஜிடேபிள்

3.கடிகாரம்

4.நெருப்பு

5. முடி வெட்டுபவர்

6.போட்டோ

7.பத்தில் ஐ-யை எடுத்தால் வருவேன் ஐ0=0

தலை இல்லாத ஆறு 6=0

எட்டில் பாதி நான் 8=0

விடை =0

8.கணக்கு பாடம்

9.அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை!

10.வேறேங்கே, தலையில் தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us