தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நத்தையும், நாகமும்!

நத்தையும், நாகமும்!

நத்தையும், நாகமும்!


PUBLISHED ON : ஜூன் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு அடர்ந்த காட்டில், நத்தையும், நாகமும், ஒற்றுமையுடன், இணைபிரியாத நண்பர்களாக, வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் -

நத்தையும், நாகமும் இரை தேட, சென்றன; ஓய்வுக்காக, ஒரு மர நிழலில் அமர்ந்தன.

மரத்தின் மேலிருந்து, 'தொப்'பென்ற சத்தத்துடன், ஒரு கல் விழுந்து, பிரகாசமாக ஜொலித்தது.

நாகம், அந்த கல்லை தீண்டிப் பார்த்து, ''நத்தை நண்பரே... இது, சாதாரண கல் அல்ல வைரக்கல்...'' என்றது.

''அப்படியா நண்பரே...'' என்றது நத்தை.

நாம், இந்த கல்லை வைத்து என்ன செய்ய போகிறோம்; துயரத்தில் இருப்பவருக்கு, தந்து விடுவோமென்று நத்தையும், நாகமும், ஒற்றுமையுடன் முடிவு செய்தன.

அந்நேரம், விறகு வெட்டி, விற்பனை செய்யும் இருவர் வந்தனர்.

'இவர்களுக்கு, இந்த கல்லை தந்து விடுவோம்' என முடிவு செய்தன.

''மனிதர்களே... எங்களுக்கு ஒரு வைரக் கல் கிடைத்தது... நீங்கள், துயரத்தில் வாடுவதைக் கண்டு, இக்கல்லை உங்களுக்கு தருகிறோம். இதை, இருவரும் பங்கு போட்டு, நல்லபடியாக வாழுங்கள்...'' என, கூறிச் சென்றன.

வைரத்தை வாங்கிய மனிதர்களுக்கு ஆசை அதிகமானது.

'இவனுக்கு தராமல், நாம் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்' என்று, ஒருவருக்கொருவர் மனதிற்குள் திட்டம் தீட்டினர்.

அதில், ஒருவன், 'என்னிடம் தான் நாகம், இந்த கல்லை தந்தது. அதனால், எனக்கு தான் இந்த கல் சொந்தம்...' என்று, சொல்ல, வாக்குவாதம் முற்றி, சண்டை ஆகி, காயங்கள் ஆனது.

நாகமும், நத்தையும் இதை பார்த்த படியே இருந்தன.

''மனிதர்களே... அந்த கல்லை என்னிடம் தாருங்கள்...'' என்று கூறிய நாகம், அருகில் இருந்த ஆற்றில், அந்த வைரக்கல்லை துாக்கிப் போட்டது.

''மனிதர்களே... நீங்கள், பிழைக்க வேண்டுமென்று தான், இந்த கல்லை கொடுத்தோம். நீங்களோ, தான் மட்டுமே அனுபவிக்க வேண்டுமென்று நினைத்ததால், அதை ஆற்றில் போட்டேன். நீங்கள் இருவரும் பேராசை பட்டதால், கைக் கெட்டியது வாய்க்கு எட்டவில்லை. இனி, கஷ்டப்பட்டே உழையுங்கள்...'' என்று கூறி விட்டுச் சென்றன.

குட்டீஸ்... பாம்பும், நத்தையும் கூறிய அறிவுரையைப் பின்பற்றுங்க... சரியா!

- ஜி.சரவணக் குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us