PUBLISHED ON : ஜூன் 07, 2019

தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
கம்பு, ராகி, வரகரிசி, தினை, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்கள் சம அளவில் சேர்த்த கலவை - 1 கப்
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சிறுதானியங்களை அரை மணிநேரம் ஊற வைத்து, நைசாக அரைத்து, மூன்று கப் தண்ணீர் சேர்த்து கலக்கி, அடுப்பில் வைத்து, அடி பிடிக்காமல் கிளறி, வேக வைத்து இறக்கவும்.
நன்கு ஆறிய பின், தயிர், தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு கலக்கி, சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்தால், 'ஜில்...ஜில்...' சிறுதானிய லஸ்சி ரெடி!
தாகத்தை தணித்து, பசியைப் போக்கி, சக்தியை பெருக்கும், சிறந்த பானம். சூட்டை தணித்து, உடலை குளிர்ச்சிப்படுத்தும்.
- என்.ரங்கநாயகி, கோவை.
தொடர்புக்கு: 88704 33414
