PUBLISHED ON : ஜூன் 07, 2019

என் வயது, 30; திருமணம், 2010ல் நடந்தது. மாமியார் வீட்டிற்கு சென்றதும், கணவர் கேட்ட முதல் கேள்வி, 'புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கா...' என்பது தான்.
'இல்லை...' என்றேன்.
உடனே, அந்த வாரம் வந்த, சிறுவர்மலர் புத்தகத்தை கொடுத்து, 'இதை படி...' என்றார்.
'இந்த புத்தகம் படித்து முடித்ததும், அலமாரியில், இன்னும், முன்பே வெளியான, நிறைய சிறுவர்மலர் இதழ்கள் இருக்கு. எடுத்து படி...' என்றும் கூறினார்.
கதைகள், தொடர்கள், பொது அறிவு தகவல்கள், 'அதிமேதாவி அங்குராசு!' என, நான் அறியாத, பல பொக்கிஷங்கள் அதில் இருந்தது. தினமும், வீட்டு வேலை முடிந்ததும், முன்பே வெளியான சிறுவர்மலர் புத்தகங்களை படிக்க துவங்கினேன்.
சின்ன சின்ன கதைகள், சித்திரங்கள் என, சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் பொழுது போனது.
இப்போது, என் மகனுக்கு, ஆறு வயதாகிறது; பள்ளி விட்டு வந்ததும், சிறுவர்மலர் இதழை படிக்கும் பழக்கத்தை சொல்லி தருகிறேன். இரவில் சிறுவர்மலர் கதைகளைச் சொல்லித் தான் துாங்க வைப்பேன்.
அரசு வேலைக்கு முயற்சிக்கும் எனக்கு, போட்டி தேர்வுகளை எதிர்க் கொள்ள, இவ்விதழில் வரும், பொது அறிவு தகவல்கள் பெரிதும், உதவுகிறது.
வெள்ளிக்கிழமை என்றால், சிறுவர்மலர் தினம் தான்!
உண்மையில், மாமியார் வீட்டில் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் சிறுவர்மலர் இதழ் தான்!
- எஸ்.தேவி, வேலுார்.
தொடர்புக்கு: 90928 58529
