தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அட்டைபெட்டிக்குள் பாம்பு!

அட்டைபெட்டிக்குள் பாம்பு!

அட்டைபெட்டிக்குள் பாம்பு!


PUBLISHED ON : மார் 31, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 31, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில், ஆசிரியர் பட்ட படிப்பு முடித்தேன். தற்போது, ஆசிரியராக பணி செய்து வருகிறேன். 1998ல் முதலாமாண்டு தேர்வுகள் முடித்து, விடுமுறைக்கு பின், விடுதிக்கு வந்தோம்.

முதலாமாண்டு மாணவர்களுக்கு முதல் தளத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். சூட்கேஸில் உடைகளையும், பிற பொருட்களையும் வைப்போம். அட்டை பெட்டிகளில், நோட்டு புத்தகங்களை வைத்திருப்போம். சன்னல்களில் சில கண்ணாடிகள் உடைந்த நிலையில் இருக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறம் காட்டு பகுதியில் தான், கல்வி நிறுவனம் அமைந்திருந்தது.

கீழ்தளத்தில் இருந்த, என் புத்தகங்கள் உள்ள அட்டை பெட்டியை, திறக்காமல், கீழ்புறம் மற்றும் மேல்புறம் சரி செய்து தூக்கி, முதல் தளத்தில் உள்ள என் அறையில் வைத்தேன்.

திறந்து பார்க்கும் போது, உள்ளே ஒரு பாம்பு சுழன்று கொண்டிருந்தது. பாம்பு என்று கூறவும், நண்பர்கள் சேர்ந்து அடித்து கொன்றனர். எத்தனை நாள் பட்டினி கிடந்ததோ பாவம், ஓட கூட முடியாத நிலையில், வயது முதிர்ந்த பாம்பாக இருந்தது.

கீழ் தளத்தில் இருந்து, அட்டை பெட்டியை தூக்கி சரி செய்து, மேல் தளத்திற்கு பாம்புடன் பெட்டியை தூக்கி வந்துள்ளேன் என்பதை நினைத்தால், இன்றும் அதிர்ச்சியாக உள்ளது.

அன்று முதல் எதையும் பார்க்காமல், ஆராயாமல், திறக்கவோ, தொடவோ கூடாது, என்று எனக்கும் பிறருக்கும் கூறி கொள்கிறேன்.

- எம்.நாகராஜ், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us