தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உண்மை பேசு!

உண்மை பேசு!

உண்மை பேசு!


PUBLISHED ON : மார் 18, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு ஊரில் ஒருவன் மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். அவன் செய்யாத பாவங்கள் இல்லை. ஒருநாள் ஒரு சாமியார் அவனிடம் வந்தார். ''உன் பாவங்களை விட்டுவிடு!'' என்றார். அவனோ, ''முடியாது!'' என்றான்.

''சரி பொய் மட்டுமாவது சொல்லாமல் இரு!'' என்றார். அவனும் சம்மதித்தான். அவன் திருடுவதற்காக அரண்மனை பக்கம் வந்தான்.

அங்கே ராஜா மாறுவேடத்தில் நின்று கொண்டிருந்தார். அவனிடம், ''எங்கே போகிறாய்?'' என்று விசாரித்தார். அவனோ, ''திருடப் போகிறேன்!'' என்றான். அரசர் தானும் வருவதாகச் சொன்னார். இவனும் சேர்த்துக் கொண்டான்.

அரண்மனைக்குள் சென்றான் திருடன். அரசர் காவல் காத்துக்கொண்டிந்தார். திரும்பி வந்த திருடன், ''பெட்டியில் மூன்று ரத்தினங்கள் இருந்தன. அவற்றில் இரண்டை மட்டும் எடுத்து வந்தேன். ஆளுக்கு ஒன்று!'' என்று சொன்னான். அரசர் சம்மதித்தார்.

மறுநாள் விடிந்ததும் மந்திரியைக் கூப்பிட்டு, ''அரண்மனையில் களவு போயிருக்கிறதா பார்த்து விட்டு வா!'' என்றார். பார்க்கப் போன மந்திரி ஒரு ரத்தினத்தை எடுத்து ஒளித்து வைத்தார். அரசனிடம் வந்து பெட்டியில் மூன்று ரத்தினங்கள் இருந்தன. காணப்படவில்லை என்று சொன்னார். அரசருக்கு உண்மை தெரிந்தது. அயோக்கிய மந்திரியை நீக்கிவிட்டு திருடனை மந்திரியாக்கிக் கொண்டார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us