PUBLISHED ON : மார் 26, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
அகத்தி கீரை - 1 கப்
மிளகாய் வற்றல் - 5
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 4 பல்
கடுகு, வெந்தயம், கடலை பருப்பு, பெருங்காயதுாள் - சிறிதளவு
புளி, உப்பு, நல்லெண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில், நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன், கடுகு, வெந்தயம், கடலை பருப்பு போட்டு வெடித்ததும், மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். சிவந்ததும், குறுக்காக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
புளியில் தண்ணீர் சேர்த்து, கரைசலாக்கி அதில் ஊற்றி, உப்பு, பெருங்காயதுாள், அகத்தி கீரை சேர்த்து மூடி, வேக விடவும். சத்துமிக்க, 'அகத்தி கீரை சாறு!' தயார். சூடான சாதத்துடன் பிசைந்து, சுட்ட அப்பளத்துடன் சாப்பிடலாம்!
- என்.கோமதி, திருநெல்வேலி.
