PUBLISHED ON : மார் 26, 2022

என் வயது, 59; சிறுவர்மலர் இதழை, 20 ஆண்டுகளாக படித்து வருகிறேன். எத்தனையோ புத்தகங்கள் பத்திரிகைகளுடன், இணைப்பாக வந்தாலும், அத்தனைக்கும் நடுவே புதுமை படைக்கிறது, சிறுவர்மலர்!
பள்ளி பருவத்தை கண்முன் காட்டும், 'ஸ்கூல் கேம்பஸ்!' சிறப்பாக உள்ளது. தொடர்கதை, படக்கதை என்று அறிவை புடம் போடும் அரிய அறிவு புதையலாக விளங்குகிறது.
கவலையை மறக்க மொக்க ஜோக்ஸ், புதிர் போட்டி, உங்கள் பக்கம் என, சிறுவர், சிறுமியரின் புத்தியை கூர்தீட்டும், உரை கல்லாக விளங்குகிறது.
'அங்குராசு!' என்ற, அதிமேதாவியின் பொது அறிவு தொகுப்புகள், அவநம்பிக்கையை அகற்றி, தன்னம்பிக்கை கொடுக்கும், 'இளஸ்... மனஸ்...' பகுதி என, தனித்துவமாக மலர்கிறது!
சிறியவர், பெரியவரை கவர்ந்திழுக்கும் சிறுவர்மலர், கோடான கோடி வாசகர் மனதில் கோலோச்சுகிறது என்றால் அது மிகைச் சொல் அல்ல!
- எஸ்.ராஜமோகன், விருதுநகர்.
தொடர்புக்கு: 82202 12189
