PUBLISHED ON : ஜூலை 25, 2014

பிரேசில் நாட்டிலுள்ள கார்கோவடோ மலையில் அமைந்துள்ள டிசூசா வனவியல் தேசிய பூங்காவில், ஆயிரம் டன் எடையுடன் நிறுவப்பட்டுள்ள இயேசுகிறிஸ்து சிலையின் உயரம் 98 அடியாகும். தென் அமெரிக்காவின் பிரேசிலிலுள்ள ரியோ-டி-ஜெனெரோய் நகரத்தையே இந்தப் பெரிய சிலை மிகக் கம்பீரமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த சிலையை வடிக்க சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. பின், பிரேசில் நாட்டின் நூறாவது சுதந்திர தின ஆண்டைக் கொண்டாடும் வகையில், இந்தச் சிலையின் நிர்மாணப் பணிகள் 1931ம் ஆண்டில் நிறை வடைந்தது. வண்ண விளக்குகளின் ஜொலிப்பால், நகரத்தின் எந்தப் பகுதியிலிருந்து இரவு நேரத்தில் பார்த்தாலும், இந்தச் சிலையின் கம்பீரத்தை நன்றாகவே கண்டுகளிக்க முடியும். இந்த இயேசு பெருமானின் சிலையை வடிவமைத்தவர் பால லாண்டோஸ்கை என்ற பிரெஞ்ச் பாலிஷ் நாட்டுச் சிற்பியாகும்.
