தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூலை 25, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கொம்புன்னா சும்மாவா!

வெகுகாலமாக வெளிநாட்டு மோகத்திலேயே திளைத்திருந்த நம்மவர்கள், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நமது பழைய பாரம்பரியம், பண்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு மோகம் ஆட்டிப் படைத்தது போன்று, விவசாயத் திலும் அந்த மோகம் ஆட்டிப்படைத்தது. மாட்டுக்கு கொம்பும், மனிதனுக்கும் முடியும் வேண்டும் என்பர். ஆனால், மேலை நாடு களைப் பார்த்து நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொள்ளும் நம்மவர்கள், மாடு வளர்ப்பதிலும் அவர் களையே பின்பற்றத் தொடங்கினர்.

குளிரான பகுதிகளில் உள்ள மாடுகளுக்கு கொம்பு வளராது.ஆனால், வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள மாடுகளுக்கு கட்டாயம் கொம்புகள் இருக்கும். கொம்பு மூலம் தான் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி சத்தை மாடுகள் சேகரிக்கின்றன.

மாடுகள் வளர்ச்சிக்கு கொம்பு அவசியம். கொம்பு என்பது மாட்டின் உடம்பில் உள்ள, 'ஆன்டெனா' என்று கூட சொல்லலாம். கொம்பு உள்ள மாட்டின் பாலுக்கும், கொம்பில்லாத மாட்டின் பாலுக்கும் சுவையில் வித்தியாசம் உண்டு. மேலும், கால்சியம் சத்து கொம்பில்லா மாட்டின் பாலில் குறைவாக இருக்கும் என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. பெரிய கொம்பு களுடன் உள்ள நமது நாட்டு மாட்டுப் பால்தான் தரமானது. கொம்பில்லாத வெளிநாட்டு மாடுகளின் பாலில் சத்துக்கள் குறைவு. இந்த பாலை தொடர்ந்து குடித்தால் சர்க்கரை நோய் தாக்குவதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஆகையால் நம்நாட்டு மாடுகளின் இளங் கன்றுகளுக்கு கொம்பில் சூடு வைக்கக் கூடாது. பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகளை தினமும் சிறிது நேரமாவது சூரிய ஒளிபடும்படி உலாவர விட வேண்டும். கறவை மாடுகள் காலார நடந்து, வயிறு முட்ட மேய்ந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கும். இறந்துபோன மாட்டின் கொம்புகளால் தயாரிக்கப் படும் கொம்பு சாண உரத்தில் பயனுள்ள பல சத்துக்கள் உள்ளன. ஆகவே, நாம் நம் நாட்டு மாடுகளை வளர்த்து, மக்களுக்கு ஆரோக்கியமான சுவையான பாலை உணவாகத் தரவேண்டும். அது நமக்கும், நமது நாட்டிற்கும் நல்லது.

சில வரிகளில் பெருத்த ஆரோக்கியம்!

*குளிர்பானங்கள், சிகரெட், ஆல்கஹால் வேண்டவே வேண்டாம்.

* 2 மணி அல்லது அதற்கும் குறைவான நேரம் தொலைக்காட்சி முன்பு செலவிடுங்கள்.

* 5 விதமான காய்கறி, பழங்களை தினசரி அவசியம் எடுத்து கொள்ளுங்கள்.

* 7 நாளும் காலை உணவை தவிர்க்காதீர்கள்.

* 10 நிமிடங்களுக்கு யோகா, தியானம் போன்ற அமைதி தரும் பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்.

* 45 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் வாக்கிங், ஜாக்கிங், உடலை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை செய்யுங்கள்.

என்றென்றும் அன்புடன்,

அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us