
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
உளுந்து - 400 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
கற்கண்டு - 400 கிராம்
எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
உளுந்து மற்றும் பச்சரிசியை, 1 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். அரைப்பதம் வந்தவுடன், துாள் செய்த கற்கண்டு சேர்த்து, நைசாக அரைக்கவும். அந்த மாவை வடை போல் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான, 'கற்கண்டு வடை!' தயார்.
வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சிறுவர், சிறுமியர் விரும்புவர்.
- மரகதம், சென்னை.

