PUBLISHED ON : செப் 18, 2021

என் வயது, 62; இல்லத்தரசியாக இருக்கிறேன்; கணவருடன் போட்டி போட்டு, சிறுவர்மலர் இதழ் படிப்பேன். ரயில்வே துறையில் அவர் வேலை பார்த்த போது, சிறுவர்மலர் இதழை எடுத்து சென்று விடுவார்.
ரயிலை அனுப்பிய பின் கிடைக்கும் மிச்ச மீதி நேரத்தில் சிறுகதைகள் மற்றும் 'மினித்தொடர்!' என, வாசித்ததை பேரன்களிடம் இரவில் சுவைபட கூறுவார். அதை நானும் செய்து வந்தேன்.
இப்போது, பேர பிள்ளைகள் சுய ஆர்வத்துடன் சிறுவர்மலர் இதழை வாசிக்கின்றனர்; நீதி கதைகளை விரும்பி படிக்கின்றனர். இது மகிழ்ச்சி தருகிறது.
அங்குராசு கூறும் செய்திகள் எல்லாம் சுவாரசியம் மிக்கவை; என் சின்ன பேரனுக்கு சாப்பாடு என்றால் ரொம்ப இஷ்டம். அதனால், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதியில் வரும், புதிய உணவுகளை செய்து கொடுத்து அசத்துவேன்.
ரசிக்கவும், குதுாகலிக்கவும் சிறுவர்மலர் இதழ் உதவுகிறது.
- ஜானகி பரந்தாமன், கோவை.

