தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வினோத குரங்குகள்!

வினோத குரங்குகள்!

வினோத குரங்குகள்!


PUBLISHED ON : நவ 04, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில், ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா பகுதி தவிர, எல்லா இடங்களிலும் காணப்படுகிறது குரங்கு.

மனிதர் போல, வடிவம், அளவில் மாறுப்பட்டுள்ளன.

அமெரிக்கா, விஸ்கான்சின் பல்கலை நடத்திய ஆய்வில், உலகின் மிகச்சிறிய குரங்கு, பிக்மி மார்மோசெட் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் எடை, 113 கிராம்; உயரம், 12.7 செ.மீ., மட்டும். உலகின் மிகப்பெரிய குரங்கு, மாண்ட்ரில். இதன் எடை, 35 கிலோ; உயரம், 3 அடி.

உலகில், 260 குரங்கு இனங்கள் உள்ளன. பெரும்பாலனவை மரங்களில் வாழ்கின்றன; ஒரு சில மட்டும் தரையில் வாழ்கின்றன. குரங்குகளை பயன்படுத்தி, மருத்துவ ஆராய்ச்சிகள், உலகம் முழுதும் நடக்கிறது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில், 2007ல், லேசுலா என்ற குரங்கு இனம் கண்டறியப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவில், 55 ஆயிரம் குரங்குகள், ஆராய்ச்சி மற்றும் சோதனைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், 10 ஆயிரம் குரங்குகள் உயிர் காக்கும் மருந்து சோதனைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

கிழக்காசிய நாடான ஜப்பான், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குரங்குகளை பயன்படுத்துகிறது. ஜப்பானில் உள்ள மக்காக் குரங்கு, அதிக குளிரையும் தாக்கு பிடிக்கும். அதாவது, மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உறை பனியிலும் வாழும் திறன் பெற்றது.

இந்த இனத்தில் பெண் குரங்கு, குட்டிகளை கவனமாக வளர்க்கும். அவை குட்டிகளுக்கு பல் துலக்க கற்றுக் கொடுப்பதை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

ஆசிய நாடான சீனாவில் குரங்கு மாமிசமும் உணவாக இடம் பெறுகிறது. அதன் மூளையை சமைத்தும், பச்சையாகவும் சாப்பிடுகின்றனர்.

குரங்குகளால், எண்களை புரிந்து கொள்ள முடியும். எண்ணவும் முடியும். எண் கணிதத்தின் அடிப்படையையும், சிறிய பெருக்கு தொகையையும், புரிந்து கொள்ள முடியும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

- விஜயன் செல்வராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us