sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : நவ 04, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழைக்காலத்தில் உணவில் கவனம்!

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். காலநிலைக்கு ஏற்ப உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே தொற்று நோய்களில் இருந்து தப்ப முடியும்.

கீரைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும். ஆனால், மழை காலத்தில் சாப்பிட்டால் பாதகம் ஏற்படும். அசுத்தமான இடங்களில் வளரும் கீரைகளில், பாக்டீரியா தொற்று, தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் அதிகம் இருக்கும். நன்கு கழுவி, அதிக வெப்பத்தில் சமைத்து சாப்பிட வேண்டும். இதை செய்ய முடியாத போது தவிர்ப்பது நல்லது.

மழைக்காலத்தில் குளிர்பதன பெட்டிகளில் இருப்பு வைக்கப்பட்ட மீன் உள்ளிட்ட கடல் உணவுகளே விற்பனைக்கு வரும். அது கெட்டுப் போகாமல் இருக்க, ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். அத்தகைய உணவுகள் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே தவிர்க்க வேண்டும்.

பாட்டிலில் அடைத்த பானங்களை தவிர்க்க வேண்டும். அவற்றில் கலந்துள்ள செயற்கை சர்க்கரை ஜீரண மண்டல செயல்பாட்டை குறைத்து விடும். வாயுத்தொல்லை, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். உணவில் விழிப்போடு இருப்பது அவசியம்.

தயிரில் நன்மைகள் ஏராளம். அதை மழைக்காலத்தில் சாப்பிட்டால் உபாதைகளை தவிர்க்க முடியாது. ஒவ்வாமை, செரிமான பிரச்னைகள் ஏற்படும். தயிருக்கு மாற்றாக, சூடான பால் குடிக்கலாம்.

ஆற்றல் உணவு!

கலோரி என்பது, உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களிலிருந்து பெறும் ஆற்றல். ஒருவருக்கு, ஒரு நாளைக்கு தேவைப்படும் கலோரிகள், உடல் வளர்சிதை மாற்றம், வயது, உயரம், வாழ்க்கை முறை, உணவின் வகை, அளவு உள்ளிட்ட காரணங்களை பொறுத்து அமைகிறது.

உணவு வகைகளில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் தான் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. இந்த சக்தி கலோரியில் கணக்கிடப்படுகிறது. உணவை சாப்பிடுவதால் உடலில் சேமிக்கப்படும் சக்தி, செய்யும் வேலைக்கு ஏற்ப செலவாகிறது.

ஒவ்வொரு நாட்டிலும், மக்கள் பல்வேறு அளவு கலோரி உள்ள உணவு வகைகளை உண்கின்றனர். உலகில் அதிக அளவு கலோரி உணவுகளை உண்போர் வாழும் நாடுகளைப் பற்றி பார்ப்போம்...

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும், 3,885 கலோரி அளவில் உணவு உண்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. உலகில் அதிக அளவு கலோரி உள்ள உணவை சாப்பிடுவோர் வாழும் நாடு இது. அடுத்த இடத்தில் உள்ளது அமெரிக்கா. இங்கு, 3,782 கலோரி அளவுள்ள உணவை உண்கின்றனர். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், 3,769 கலோரி உண்கின்றனர். மத்திய கிழக்கு நாடான துருக்கியில், 3,711 கலோரி அளவு உணவு உண்கின்றனர்.

இந்த பட்டியலில் நம் நாடு, 2,533 கலோரிகளுடன், 38ம் இடத்தில் உள்ளது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us