PUBLISHED ON : நவ 04, 2023

அ நிறம் | அளவு
என் வயது, 70; அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை, 20 ஆண்டு காலமாக தொடர்ந்து படித்து வருகிறேன். இதில் இடம் பெறும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, என் மாணவப் பருவத்துக்கு அழைத்து செல்கிறது. நினைவுகளை மீட்டுகிறது.
சிரிப்பை அள்ளித் தரும், 'மொக்க ஜோக்ஸ்!' சுவையைத் தரும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' நவரசம் மிக்க, சிறுகதை, இனிமை தரும், 'குட்டி குட்டி மலர்கள்!' அறிவு கதம்பமாக திகழும், 'அதிமேதாவி அங்குராசு!' என, பயனுள்ள தகவல்களை அளித்து அனைத்து தரப்பினரையும் மகிழ வைக்கிறது சிறுவர்மலர் இதழ். அது தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துகள்!
- நடேஷ் கன்னா, திருநெல்வேலி.
தொடர்புக்கு: 99442 84135
