தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கற்பித்தலில் உத்தி!

கற்பித்தலில் உத்தி!

கற்பித்தலில் உத்தி!


PUBLISHED ON : டிச 11, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 5ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் சரோஜினி.

அவர் பாடம் நடத்தும் அழகே தனி; எளிய முறையில் கவரும் பாணியை கடைபிடித்து வந்தார்.

கடினமான கேள்விகளை வகுப்பில் கேட்பார்; அதற்கு பதில் அளிக்கவில்லை என்றால் கோபம் கொள்ள மாட்டார். பதில் நினைவில் பதியும் வகையில், ஏதாவது ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டி, எளிதாக புரியும்படி விளக்கி கற்றுக் கொடுப்பார்.

ஒரு நாள், 'மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எத்தனை...' என்று என்னிடம் கேட்டார். படித்தது உடனே நினைவில் வராததால் விழித்தபடி தயங்கி நின்றேன். உடனே, '௨௦ முறை ஆற்றை கடந்தால், எலும்புகளை எண்ணி விடலாம்... சிந்தித்துப் பார்...' என நகைச்சுவையாக கூறினார்.

அந்த புதிர் புரிந்து, '206 எலும்புகள்...' என பதில் கூறினேன். நேரடியாக கேட்ட போது பதில் தெரியவில்லை; ஆனால், புதிருடன் கதை போல் கூறியதால், எளிதாக மனதில் பதிவதை உணர்ந்தேன்.

இந்த வித்தியாசமான அணுகுமுறை கவர, அவரது வகுப்பு எப்போது வரும் என ஏங்கிக் கிடந்தோம். கவனமுடன் கற்று உயர்ந்தோம்.

என் வயது, 5௧; தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன்; வகுப்பறையில் பாடம் நடத்தும் போது, அந்த ஆசிரியை கற்று தந்த பாணியை கடைப்பிடிக்கிறேன். அதனால் மாணவ, மாணவியரிடம் நல்ல பெயர் எடுத்துள்ளேன்.

அறவழியில் எளிய உத்திகளைக் கடைபிடித்து, சிறப்பாக பாடம் கற்பிக்க முடியும் என நிரூபித்து காட்டியவரை மனதில் கொண்டுள்ளேன்.

- வி.சாந்தி, சென்னை.

தொடர்புக்கு: 98844 89838


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us