
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெயர் பா.காவியா ஸ்ரீ. கிழக்கு தாம்பரத்திலுள்ள எம்.சி.சி. கேம்பஸ் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். டேபிள் டென்னிஸ் விளையாட்டில் நிறைய பரிசுகளும், பதக்கங்களும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பெற்றுள்ளார்.
தேசிய அளவிலான தரவரிசை போட்டியில் 2015ம் ஆண்டு இந்திய அளவில் இரண்டு தங்கப் பதக்கங்கள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பள்ளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியிலும் மாநில அளவில் முதல் இடத்தில் உள்ளார்.
உலக அளவில் வெற்றி பெற தினமும், ஆறு மணிநேரம் பயிற்சியில் ஈடுபடுகிறார்.
உங்களது முயற்சியில் வெற்றி பெற தினமலர் - சிறுவர்மலர் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
ஹாட்ஸ் ஆப் காவியா ஸ்ரீ!